அரசியல்செய்திகள்மலையகம்

தோட்டத் தொழிலாளர்களை  சிறுதோட்ட உடமையாளர்களாக்க வேண்டும்..

கோட்டாகம மேதின கூட்டத்தில் கிருஷ்ணகுமார் 

உலகத் தொழிலாளர்கள் தினத்தின் பிரகடனமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடைமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என ‘கோட்டா கோ கம’ வில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

 

சர்வதேச தொழிலாளர் தினத்தில் கோல்பேஸ் போராட்டக்களத்தில்  இடம்பெற்ற சுயாதீன மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கிருஷ்ணகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்

 

அவர் மேலும் உரையாற்றுகையில்

 

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களின் மனப்பூர்வமான ஆதரவினை வழங்குவதுடன் இன்றைய இளைஞர்கள் கோரும் முறைமை மாற்றத்தில்> நாட்டின் அபிவிருத்திக்காக கடந்த இருநூறு வருடங்களாக உழைத்துவரும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உடைமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை.

1970 களில் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் சிங்கள பெரும்பான்மையினருக்கு பெருந்தோட்டக்காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டு> சிறுதோட்ட உடைமையாளர்களாக்கப்பட்டு அவர்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழியேற்படுத்திக்கொடுக்கப்பட்டது. அதேநேரம் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த மலையக மக்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் தினக்கூலிகளாக தொழில்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதன் காரணமாக இன்றுவரை ஏனைய மக்களைப் போல சமத்துவமாக வாழவும்> வறுமையின்றி வாழவும் தினமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் இன்று நாடெங்கும் வறுமை தலைதூக்கியுள்ளது. இருப்பினும் மலையக மக்களின் வாழ்வில் இந்த வறுமை புதியதல்ல. இந்த நாட்டில் வாழ தொடங்கிய காலத்திலிருந்து வறுமை காணப்படுகிறது.

1940 களில் முல்லோயா கோவிந்தன் வெறும் 10 சதத்தை கோரி போராடியப்போது பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் எழுபது வருடங்களின் பின்னர் இன்று 1000 ரூபாவிற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். கோரப்படும் தொகையில் மாற்றம் வந்திருக்கிறதே தவிர> வாழ்க்கையில் எவ்வித மாற்றமுமின்றி> இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். எனவேதான் இந்த தொழிற் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த இலங்கையின் தென் பகுதிகளில் எவ்வாறு சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டமையினை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாம்.

இந்த நாட்டின் அரசியலமைப்புப்படி எல்லா மக்களும் சமமானவர்கள். இருப்பினும் மலையக மக்களை இற்றைவரை ஆண்டுவந்த அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் பாரபட்சமாகவே நடத்திவந்துள்ளன. இருப்பினும் பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களும் இந்த நாட்டின் கௌரவமிக்க பிரஜைகளே. ஏனைய மக்களைப் போல இந்த நாட்டின் கௌரவமிக்க பிரஜைகளாகவே வாழ விரும்புகின்றோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த மக்களும் இந்த முறையை மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்கிய முன்னோடிகள் என்றே குறிப்பிட வேண்டும். எனவே இத்தகைய ஒரு போராட்டத்தை முன்னெப்போருடன் நாங்களும் பங்குதார்களாக இருப்பதோடு> மனப்பூர்வமான ஆதரவினையும் தந்துவருகிறோம் என்பதையும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். அத்தோடு இந்த போராட்டமானது கப்பல் வராத துறைமுகத்தையும் விமானமங்கள் வராத துறைமுகத்தையும் போட்டிகளே நடக்காத மைதானத்தையும் கடன்வாங்கி உருவாக்கி> நாட்டை பாதாளத்திற்குள் தள்ளிய ராஜபக்ச குடும்பத்தினர் இந்த நாட்டின் அரசியலைவிட்டு நீங்கும்வரை தொடரவேண்டும்.

 

Related Articles

Back to top button