...
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதற்கு எந்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அல்லது முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை

தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதற்கு எந்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அல்லது
முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை தாக்கியவர்களுக்கு
எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்
அவர்கள்

தலவாக்கலை பிரதேசத்தில் மஸ்கெளிய பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்குகின்ற
பெரிய கட்டுகல் தோட்டத்தில் தோட்ட அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இருவர்
தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தாய்மார்கள் இருவரை தாக்கி இன்று அப்பெண்
தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுளார்கள்.

இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் தொடர்ந்தும் தொழிலாளர்கள்
தாக்கப்படுவதை ஜீரணித்துக் கொள்ள முடியாது . தொழில் பிணக்குகள் தொழிலாளர்
முகாமைத்துவம் விடயங்களில் தொழிற்சங்கங்களை புறக்கணித்த பெருந்தோட்ட
நிறுவனங்கள் இன்று நேரடியாக தொழிலாளர்களை தாக்குவதற்கு முற்பட்டு
இருக்கின்றார்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதற்கு எந்த முகாமைத்துவ
அதிகாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை குறிப்பாக பெண் தொழிலாளர்களை
தாக்கியது முற்றுமுழுதாக மனித உரிமை மீறிய நிலைப்பாடாகவே நான் கருதுகின்றேன்
.

இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை தேசிய தோட்டத்
தொழிலாளர் சங்கம் தயாராக இருக்கின்றது என்பதுடன் எதிர்வரும் காலங்களில்
இவ்வாறான நிலைமை ஏற்படும் எனின் ஒட்டுமொத்த மலையகத்தையும் ஒன்றுதிரட்டி
போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்
கொள்கின்றேன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen