அரசியல்மலையகம்

தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஓய்வறை கட்டிடங்கள் நிர்மாணிப்பு.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையக தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலில் ஈடுபடும் போது இளைப்பாற, உணவு உட்கொள்ள, மலசலகூட வசதிகளை கொண்ட ஓய்வறை கட்டிடங்கள் மலையகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக ஹய்பொரஸ்ட் முதலாம் பிரிவில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தை அமைச்சர் நேரில் சென்று  பார்வையிட்டார்.

இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார்,நுவரெலியா பிரதேச சபை தலைவர் யோகராஜ், நுவரெலியா பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button