மலையகம்

தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று நுவரெலியாவில்..

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார சம்பளம் தொடர்பான கலந்துரையாடல் நுவரெலியாவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (04/08/2019) நுவரெலியா சீபேங்க் ஹோட்டலில் இடம் பெற்றது.

இது தொடர்பான ஆய்வினை சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சார்பாக பேராசிரியர் அமரர்.எம் சின்னத்தம்பி மற்றும் பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் ஆகியோரால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் தொடர்பான அறிக்கையையினை அடிப்படையாக கொண்டே நேற்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் வழங்கப்பட வேண்டிய சம்பளம் 1108 ரூபா என்பதை விஞ்ஞான ரீதியான மேற்கொண்ட குறித்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு வளவளராக பேராசியர் விஜயசந்திரன் செயல்பட்டதோடு,மலையகம் தொடர்பாக செயல்படும் சிலவில் அமைப்புக்களை சார்ந்தவர்கள் ,சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொன்றிருந்தனர்.

Related Articles

Back to top button
image download