அரசியல்

தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் கொடுப்பனவில் சர்வாதிகாரம் காட்டும் நவீன்..

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக இருந்த 50 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கொடுப்பனவுக்கான யோசனையை பிரதமர் ரணில் இன்று முன்வைத்தார்.

எனினும் தமது அமைச்சில் இருந்து 600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முடியாது என அமைசர் நவீன் திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்தாக தெரிவிக்கப்டுகின்றது.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி அமைக்கவிருக்கும் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம் என எச்சரித்து அமைச்சரவை கூட்டத்தில் இருந்து அமைச்சர் திகாம்பரம் வெளிநடப்பு செய்தார்.

Related Articles

Back to top button