சமூகம்
நகையகமொன்றில் கைவரிசை காட்டிய பெண்கள் : ஒருவர் கைது
பதுளை பிரதேசத்தில் நகையகமொன்றில் தங்க ஆபரணங்களை திருடிய இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரிடம் இருந்து திருடப்பட்ட 54 தங்க காதணிகளில் 32 காதணிகளும் மற்றும் 6 தங்க மோதிரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பெண்கள் இருவரும் ஹொரணை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளையொன்றின் சந்தேகநபர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
அதனுடன் தொடர்புடைய வழக்கொன்றிற்காக ஹொரணை நீதிமன்றிற்கு வந்திருந்த போது குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மற்றைய பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.