செய்திகள்

நகை திருடிய நபர் சிக்கினார்.

ஹக்மன நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றிற்கு வருகை தந்த நபர் அங்கிருந்த தங்க நகையொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பித்தளை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி குறித்த விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்த சுமார் 72500 ரூபாய் மதிப்புடைய தங்க நகை ஒன்றை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளார்.

விற்பனை நிலையத்தின் உரிமையாளரான பெண், விற்பனை நிலையத்திற்கு முன்னால் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில், தங்க நகை கொள்ளையிடப்படுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, உடனடியாக செயற்பட்ட ஹக்மன பொலிஸார் பாதுகாப்பு கெமராவை பரிசோதித்து நகையை திருடிய நபரை பெலிஹத்த பிரதேத்தில் வைத்து கைது செய்ததுள்ளனர்.

பெலிஹத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related Articles

Back to top button
image download