...
செய்திகள்

நடன இயக்குனர், நடிகர் சிவசங்கர் மறைவு

பிரபல நடன இயக்குனரும், நடிகருமானசிவசங்கர், கோவிட் தொற்று பாதிப்பால் காலமானார்.

தனுஷ் நடித்ததிருடா திருடிபடத்தில் இடம் பெற்ற ‘மன்மத ராசா…’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றவர் நடன இயக்குனர் சிவசங்கர், 73. இதுவரை, 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக மட்டுமின்றி,நடிகராகவும் திரையுலக பயணத்தைதொடர்ந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாஉள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் மட்டுமின்றி, இவரது மனைவி மற்றும் மகன்களும் கோவிட்டால்பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றிசிவசங்கர் காலமானார்.

முன்னதாக தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்டபலரும் சிவசங்கரின் மருத்துவத்திற்கு உதவி புரிந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தது, திரையுலகை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen