செய்திகள்

நடராஜனுக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய
குழாத்தில் தமிழக வீரரான தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சிரமத்துக்கு மத்தியிலும் , தன் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக
சர்வதேச கிரிக்கெட்டுக்குள் பிரவேசித்த தங்கராசு நடராஜன் அவுஸ்திரேலியாவுக்கு
எதிரான மூன்றாவது போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெறவுள்ளார்.

உபாதைக்குள்ளான வேகப்பந்து வீச்சாளர் உமேஸ் யாதவ்வின் வெற்றிடத்துக்கு பதிலாக
தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி எதிர்வரும் ஏழாம் திகதி சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப்போட்டியில் நடராஜனுக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் இந்தியா
சார்பாக மைல்கல் சாதனையொன்றை எட்டுவார்.

அதன்பிரகாரம் ஒரே மூன்றுவகையான கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சார்பாக
அறிமுகமான ஒரே வீரர் என்ற சிறப்பை நடராஜன் பெறுவார்.

அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் அறிமுகமான
நடராஜன் , அந்த தொடரில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன் ,
இந்தியாவின் தொடர் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்

Related Articles

Back to top button
image download