சினிமாசெய்திகள்

நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா : ரசிகர்கள் பிரார்த்தனை

இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மற்றும் அவரின் மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.” இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் டுவீட்டைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் விரைவில் பூரண நலம்பெற பலரும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மற்றும் அவரின் மனைவி பூர்ணிமா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com