Breaking Newsசினிமா

நடிகர் விவேக் காலமானார்

திடிர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.45 அளவில் அவர் காலமானதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது வீட்டில் இருந்த வேளையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு நேற்று ஏற்பட்டது.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விவேக், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

விவேக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் சுமார் 100ற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2020ம் ஆண்டு தாராள பிரபு திரைப்படத்திலேயே அவர் இறுதியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1961ம் ஆண்டு பிறந்த விவேக், மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் ஊடாக 1987ம் ஆண்டு திரையுலகத்தில் கால்தடம் பதித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com