செய்திகள்

நாடு மீண்டும் அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகரும் அபாயம் – இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம்

உரிய கண்காணிப்பின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையின் ஊடாக, நாடு மீண்டும் அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி நகரும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களில் அதிகளவான இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் உரிய வகையில் கண்காணிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையானது மிகவும் அபாயகரமானது என உபுல் ரோஹண கூறுகின்றார். 

Related Articles

Back to top button