சமூகம்
நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு சென்ற மாணவர் சடலமாக மீட்பு
குளியாப்பிடியில் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் தின நிகழ்விற்கு சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் வல்பிடகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு நண்பரது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளார்.
இந்த நிகழ்வின் போது அங்குள்ள கங்கை ஒன்றுக்கு நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் குளியபிடிய – பன்னல – எலபடகம பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய மாணவர் என குறிப்பிடப்படுகின்றது.