நுவரெலியாமலையகம்

நண்பர்கள் தினத்தில் நல்ல சேவைக்காக இணைந்த “தேயிலை எம் தேச(ம்)” இணைய நண்பர்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட லயன் குடியிறுப்பொன்று எரிந்து குறித்த வீடுகளில் வசித்த மக்கள் பல சொத்துக்களை இழந்த நிலையில், தற்போது மூன்று குடும்பங்கள் தவிர ஏனைய குடும்பங்கள் தற்காலிக வசிப்பிடங்களிலயே இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயற்றுக்கிழமை வெளிநாட்டிலும் ,உள்நாட்டிலும் வசிக்கும் மலையக இளைஞர்கள் சிலர் சமூக இணையதள மூலமான தொடர்பின் மூலம் “தேயிலை எம் தேசம்” என்ற அமைப்பினுடாக முதலாவது வேலை திட்டமாக பெல்மோரல் தோட்டத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு தேவையான(அவசியமான) உதவிகளை அங்குள்ள இணைப்பாளர் வி.எம் .குமார் மூலம் செய்தார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பெற்று கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.தேவையாயின் அந்த மக்களுக்கு அவற்றை பெற்றுக்கொள்ளவது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அது தொடர்பான அதிகாரிகளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்ய முடியும் எனவும் இதன் போது இந்த அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் தேயிலை எம் தேசம் அமைப்பினர்களுடைய நோக்கம் மலையகத்தில் நடக்கின்ற பிரச்சைனைகளை அவர்களே தீர்த்துகொள்ளவேண்டும் என்பதேயாகும்.அந்த அமைப்பின் நாமமே “நமக்காக நாம்” எனவே இனி மலையகத்தில் ஏதெனும் அனர்தங்களோ, வேரேதும் பிரச்சனைகளோ இடம் பெற்றால் இந்த அமைப்பை சார்ந்த இளைஞர்கள் குறித்த இடத்தில் மக்களுக்கு உதவிட இருக்கவேண்டும் என்பதுவும் இந்த அமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button