அரசியல்செய்திகள்

நபரின் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிட சட்டம் அனுமதிக்காது – அமெரிக்கா!

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரினால் பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக இதற்கு முன்னர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை துறந்தது உண்மையா என்பது குறித்து தகவல் வழங்க அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி மங்கோரின் மறுத்துள்ளார்.
எந்தவொரு நபரின் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிட அமெரிக்க சட்டம் அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download