சினிமா

நம்மவரான பொத்துவில் அஸ்மினின் கவி வரிகளில் “திரும்பிப்பார்” திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான ‘திரும்பிப் பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் அமீர், இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் இப்ராஹிம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘திரும்பிப் பார்’. இதில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் ரிஷி ரித்விக் , டேனியல் போப், ராஜ்குமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி பிரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் குரு இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவி வித்யா லட்சுமி புரொடக்சன் மற்றும் பி எம் டி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கிரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பல நூற்றாண்டுகளுக்கு முன் யுத்த களத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக ‘நிழல் நடை’ என்ற யுத்த உத்தி பயன்படுத்தப்பட்டது. இதனை மையப்படுத்தி இந்திய திரை உலகில் முதன் முறையாக ‘திரும்பிப் பார்’ என்ற கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனா அஸ்வின், தயாரிப்பாளர் சி. வி. குமார், ஆர். கே. சுரேஷ்,  ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகர் விக்ரம் பிரபு, நடிகைகள் யாஷிகா ஆனந்த், சாந்தினி ஆகியோர் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை வித்யா பிரதீப், கையில் ஆயுதத்துடன் கோபமாக பார்வையிடுவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

பாடல்வரிகளை பிரபல இலங்கை கவிஞர்  பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் ஒளிப்பதிவு சக்திப்பிரியன், படத்தொகுப்பு பி.ஆர்.பிரகாஸ், ஸ்டன்ட் ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார்,நடனம் சசிகுமார்,

ஆடை வடிவமைப்பு தனா, ஆடியோ கிராபர் விபி.சுகவேதன்,

மேக்கப் சசிகலா, மக்கள் தொடர்பு- வேலு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

படத்தின் டீசர்,டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு குறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related Articles

Back to top button