செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் தமிழ் ஊடகவியலாளர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தமையானது கண்டிக்கத்தக்க செயல்-ரூபன் பெருமாள்

ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமையுள்ள இந்நாட்டின் தனியார் தமிழப் பத்திரிகையொன்றின் தலைமை ஆசிரியரொருவரது வீட்டுக்கு சிஐடி எனும் போர்வையில் நள்ளிரவு நேரத்தில் உள் நுழைய முயற்சித்தமையானது கண்டிக்கத்தக்க செயலென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயக உரிமையாகும். அதன்பால் நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது ஊடகவியலாளர்களே. அவ்வாறு உண்மை செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் செயற்படுவார்களேயானால் அதனை ஒருபோதும் அனுமதிக்க தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணிகளை முன்னெடுக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். காரணம் அப்போதுதான் மக்களுக்கு உண்மையான செய்திகள் கிடைக்கப் பெறும் என நம்புகிறேன். அவ்வாறு செய்திகளை வெளியிடும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பின், அது தொடர்பில் சட்டரீதியாக செயற்படுவதற்கு அணுகுமுறைகள் இருக்கும்போது அவற்றை தவிர்த்து, இவ்வாறு நள்ளிரவு 2:30 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயற்சித்தமையானது தண்டனைக்குரிய விடயமாகவே தாம் கருதுவதாகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரூபன் பெருமாள் வழியுறுத்தியுள்ளார்.

எனவே, இவ்விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று, இனிமேல் இவ்வாறு நடைபெறாதிருக்கும் வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen