செய்திகள்
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை ஏற்றம்
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்
கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்)
ஒக்டைன் 92 – 137 ரூபா
ஒக்டைன் 95 – 148 ரூபா
ஒட்டோ டீசல் – 109 ரூபா
சுப்பர் டீசல் – 119 ரூபா
மண்ணெண்ணெய் – 101 ரூபா
சமுர்த்தி பயனாளிகளும், மீனவர்களும் மண்ணெண்ணெய்யை பழைய விலைக்கே பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.