Breaking Newsசெய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு : முழு விபரம் இதோ

எரிபொருள் விலை இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன். லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையும் குறித்த அறிவிப்பின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com