நுவரெலியாமலையகம்

நவதிஸ்பன சுகாதார அதிகாரிகள் காரியாலய ஏற்பாட்டில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் ஓர் அங்கமாக நுவரலியா மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதிக்குற்பட்ட நவதிஸ்பனை பொது சுகாதார அதிகாரிகள் காரியாலய ஏற்பாட்டில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 30 வயதுக்கு மேற்பட்டோரென இரண்டு பிரிவுகளில் இது நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை 1.09.2021 அன்று 30 வயதுக்கு மேற்பட்டோர்க்கான இரண்டாவது மாத்திரையை தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஹபுகஸ்தலாவை அன்னூர் ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலவரத்தையும் தாண்டி மிகவும் ஆர்வத்துடன் தங்களுக்கான மாத்திரைகளை பெற்றுக்கொண்டனர்.

இந்த இக்கட்டான நிலையிலும் சிரமம் பாராது மக்களுக்கான சேவைகளை வழங்கும் Nawathispane MOH காரியாலய அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலை ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

புகைப்பட உதவி : மஷூர் மகீன்

தகவல் : எம்.ஐ.சல்மான்

Related Articles

Back to top button


Thubinail image
Screen