ஆன்மீகம்மலையகம்

நவநாதர் சித்தர் சிவாலய மிருத்துஞ்சயாக பூஜை வழிப்பாடுகள்!

நவநாதர் சித்தர் ஆலயத்தின் பௌர்ணமி மகா யாகபூஜையும் அன்னதான நிகழ்வும் மிகச்சிறப்பாக இன்றைய தினம் குயின்ஸ்பெரி நவநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.

முப்பெரும் சித்தர்களின் விசேட யாகபூஜை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் யாழ்ப்பாணம் கீரிமலை நரசிம்ம சித்தரின் பிரதம சீடரான நவநீதன் சித்த சுவாமிகளாலும் காகப்புஜண்ட கோபி சித்தராலும் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டது.

விசேட சித்தமகாயாகப்பூஜை இந்தியாவிலிருந்து வருகைதந்த முப்பெரும் சித்தர்களான நவநாதர்,சித்தானைக்குட்டி,பெரியானைக்குட்டி சித்தர்களின் புனித மிருத்துஞ்ஞ யாகமும் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்துக்கொண்டதோடு தீபவிளக்கேற்றல் நிகழ்விலும் கலந்து தெய்வ அருள் கிட்டினர்.

அத்தோடு நாட்டில்பலபாகங்களிலிருந்தும் பக்த அடியார்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.
இன்றைய சிறப்பு நாளில் நவநாதர் சித்தர் அருள்வேண்டி சிறப்பு வழிப்பாடுகளும் நவநாதர் ஆலயத்தில் இடம்பெற்றது.

இனிவரும் காலங்களில் பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளில் கலந்துக்கொள்ளும்படி சித்தர் பீடம் அன்புடன் அழைப்பு விடுகின்றது.

Related Articles

Back to top button