அரசியல்செய்திகள்

நவம்பர் 10 தொடக்கம் டிசம்பர் எட்டில் ஜனாதிபதி தேர்தல்.

நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டு  தேர்தல்கள் ஆணைக்குழு , அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி என குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட கடிதம்  இன்று காலை வேளையில் செயலாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்  கல்விப்  பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தேர்தல்கள் ஆணையாளருககு  அறிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் நிலைமையின் பிரகாரம் நவம்பர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 2 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் தென்படுகின்றன.

Related Articles

Back to top button
image download