மலையகம்

நவீனுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் கொடும்பாவியும் எரிப்பு ..

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பணவு 50 ரூபாவினை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெருந்திரளான ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கபட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலயத்திற்கு மேல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்கு கேட்டு இனி வரவேண்டாம் என்ற கோஷத்தையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இதன்போது பலமான முறையில் எழுப்பியுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு வருட காலபகுதிக்குள் நாள் ஒன்றுக்கு 50 ரூபா வழங்கபட வேண்டும் என கோரி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழில் அமைச்சர், பிரதமர் ஆகியோரோடு பல சுற்று பேச்சுவார்தைகளை நடத்திய போதிலும் தொழிலாளர்களுக்கு இதுவரையில் குறித்த இடைக்கால கொடுப்பணவான 50 ரூபா வழங்கபடவில்லை. 

ஆனால், பேச்சுவார்த்தை நடாத்தபட்ட போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு குறித்த 50 ரூபாவினை தேயிலை சபையின் ஊடாக பெற்று தருவதாக கூறிய அமைச்சர் இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்கினால் முதலாளிமார்களும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தேயிலை சபையும் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என கூறுகிறார். 

எனவே, மலையக மக்களுடைய வாக்குகளில் பாராளுமன்றம் சென்ற அமைச்சர் நவீன் திசாநாயக்க ஒட்டு மொத்த மலையக மக்களையும் காட்டி கொடுக்க முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைய 50 ரூபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

இதனால் 50 ரூபாவை உடனடியாக வழங்கு,பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உறிஞ்சாதே போன்ற பாதாதைகளை ஏந்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதேவேளை, ஆர்ப்பாட்டகாரர்கள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து மல்லியப்பு சந்தி வரை சென்று, பின் மல்லியப்பு சந்தியில் வைத்து அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

Related Articles

Back to top button