நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

நவீன வசதிகளைக்கொண்ட ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி தொழிநுட்ப பயிற்சி நிலையம் கொட்டக்கலையில் …

ஆறுமுகன்  தொண்டமான்  சமூக அபிவிருத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று கொட்டகலை CLF வளாகத்தில் சம்பிரதாய பூர்வமாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

மலையக  இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக, நவீன வசதிகளைக்கொண்ட பயிற்சி நிலையத்தினை பிரதமரின் பாரியார் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களினால் திறந்துவைத்தார். இதனோடு தொழிநுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வகையில் கணனிகள் பொருத்தப்பட்ட நிலையம், தையல் வகுப்பறை, விரிவுரை மண்டபம், நூலகம் போன்றன இதில் அடங்குகின்றன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ, இ.தொ.கா வின் போசகர் முத்து சிவலிங்கம்,  நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா பிரதி தலைவர் அனுசியா சிவராஜா மற்றும் இ.தொ.கா வின் உப தலைவர்கள், பிரதேச மற்றும் நகர சபைகளின் தலைவர்கள்,  உத்தியோகஸ்தர்கள், தோட்ட தலைவர் தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com