
ஜப்பான் – ஸ்ரீலங்கா நட்புறவு, கலாச்சார நிதியம் வருடம்தோறும் நடாத்தும் “புங்கா” விருது வழங்கும் விழாவில் பொகவந்தலாவைச் சேர்ந்த செல்வராஜ் லீலாவதிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
நாடகத் துறைக்கான சிறப்பு விருதே செல்வராஜ் லீலாவதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ லெச்சுமித் தோட்டம் மத்திய பிரிவை பிறப்பிடமாக கொண்ட இவர் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல.02 தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்ஆவார்.
செல்வராஜ் லீலாவதிக்கு கிடைக்கபெற்ற ‘புங்கா’ விருது மலையகத்திற்க்கு மாத்திரம் அல்ல பொகவந்தலாவ மண்ணுக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்துள்ளது. இந்நிகழ்வில், அமைச்சர் சஜித்பிரேமதாச உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.