செய்திகள்

நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் ..

நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி பொதுப்போக்குவரத்து நவீன மயப்படுத்தப்பட்டு, சொகுசு சேவைகளாக மாற்றப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் பிரத்தியேக வாகனங்களைப் பயன்படுத்துவதை விடுத்து, பொதுப் போக்குவரத்தில் நாட்டம் கொள்ளச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்த நிலையில் பஸ், மற்றும் புகையிரத சேவைகள் ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button
image download