அரசியல்

நாடாளுமன்றத்தில் அதிரடியாக நுழைந்த பொலிஸார்

நாடாளுமன்றத்தில் இன்றும் அமிளி துமிளி ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் மற்றும் செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் நுழைந்துள்ளனர்.

இதனால் அங்கு அங்கு பெரும் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் என கோரி ஆளுந் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதையும் அவரைச்சுற்றி ஏனைய அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொலிஸார் நுழைந்தபோது ஆளுந்தரப்பினர் கதிரைகள் மற்றும் புத்தகங்களால் வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button