செய்திகள்

நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் ஆரம்பம்…..

நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் ஆரம்பம்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்றும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த கணக்கறிக்கை தொடர்பான விவாதம் தற்போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து அதன் மீதான விவாதம் நேற்றும் இன்றும் இடம்பெற்று வருகின்றது. குறித்த இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நான்கு மாதங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் மொத்த செலவீனம்  ஆயிரத்து 747 தசம் 68 பில்லியனாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் இந்த இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டு அல்லது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button