அரசியல்
நாடாளுமன்றில் இன்றும் பெரும் பதற்றம்
நெருக்கடியான அரசியல் நிலைமைக்கு மத்தியில் நேற்று கூடிய நாடாளுமன்றம் குழப்ப நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று ஆரம்பமாகியது.
இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் ஆரம்பமாக இருந்த நிலையில் , அங்கு ஏற்பட்ட அமிளி துமிளி காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.