அரசியல்செய்திகள்

நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம்.

நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் செய்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஆளுங்கட்சி அங்கத்தவர்களின் நாடாளுமன்ற சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப , ஆளும் கட்சியின் ஆசன பங்கீடு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் எதிர்கட்சியினருக்கும் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

புதிய பிரதமர் பதவியேற்பின் பின்னர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் தடவையாக நாடாளுமன்ற கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download