அரசியல்செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்.டி.சொய்சாவின் இழப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ..?

இரத்தினபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்.டி.சொய்சாவின் இழப்பைத் தொடர்ந்து எட்டாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

1981 ஆண்டு 1ஆம் இலக்க நாடாளுமன்ற சட்டத்தின் 64 (1)வது சரத்துக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்றிருப்பதை அறிவிப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், நேற்று (05) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற சட்டத்துக்கு அமைய அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இரத்தினபுரி தெரிவத்தாட்சி அதிகாரியின் ஊடாக, இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விருப்பு வாக்கில் அடுத்த நிலையில் உள்ள நபர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வார்.

இதன் பின்னர் குறித்த நபருடைய பெயரை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Related Articles

Back to top button