நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் 1000ரூபா சம்பள போராட்டத்துக்கு ஆதர்வாக சில தோட்டங்களில் மக்கள் வேலை நிறுத்தம்.?

தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா அடிப்படை சம்பளம் கோரிய போராட்டம் நாடுதழுவிய ரீதியில் இன்று இடம்பெறுகின்றது. 15கும் மேடற்பட்ட சிவில் அமைப்புகள் 1000 இயக்கம் எனும் பொது பெயரில் இந்த ஆர்பாட்டத்தினை முன்னெடுகின்றனர் என மலையக சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமி அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதர்வு வழங்கும் முகமாக இன்று பல தோட்டங்களில் பெருந்தோட்டமக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.குறிப்பாக கந்தப்பளை,ராகலை ,நடுக்கணக்கு ,ஐ பொரஸ்ட் போன்ற தோட்டங்களில் மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 23ம் திகதி போராட்டம் நடைபெறும் இடங்கள்,
1. கேகாலை தெய்யோவிட்ட
2.பதுளை நகரம் காலை 10.00 மணி
3.அப்புத்தளை நகரம் நண்பகல் 12 மணி
4.தெமொதர மதியம 12.00 மணி
5.எட்டம்பிட்டிய மதியம் 12.00 மணி
6.யாழ்ப்பாணம் மாலை 3 மணிக்கு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில்
7.கிளிநொச்சி காலை 10 மார்க்கட்டு அருகில்
8.வவுனியா காலை 10 பழைய பஸ்தரிப்பிடத்துக்கு அருகில்
9.மாத்தளை ரத்தொட
10 பொகவந்தலாவ காலை 8. மணிக்கு
11.ஹட்டன்
12.மதுகம மாலை 3.00 மணிக்க
13.பதுரலிய மாலை 3.00 மணிக்கு
14.தலவாக்கெல்ல
15.ராகல
16.நுவரெலியா
17.தெல்தொட
18.இரத்தினபுரி மணிக்கூண்டு கோபுரத்துக்கு அண்மையில் மாலை 3.00 மணி
19.ருகுணு பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் பகல் 12 மணிக்கு, இணைப்பாளர் மகில பண்டார
20.ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
21.தென்கிழ்க்கு பல்கலைக்கழகம்
22.சப்பரகமுவ பல்கலைக்கழகம்
23.ரஜரட பல்கலைக்கழகம்
24.களனி பல்கலைக்கழகம்
25.வடமேல் பல்கலைக்கழகம்
26.பேராதனைப் பல்கலைக்கழகம்
27.கொஸ்கம நகரத்தில் மாலை 3.00 மணிக்கு
பிரதான எதிர்ப்பு பேரணி சகல பொதுநல அமைப்புக்களதும் பங்களிப்புடன் கேஸ்பார் சந்தியில் மலை 3.00 மணிக்கு ஆரம்பமாகும்