செய்திகள்

நாடு எப்போது முழுமையாக திறக்கப்படும்.?

பாரிய அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட இல்லை என்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான தேசிய மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டெம்பர் மாதத்துக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, உரிய பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் கொரோனா தொற்றுடன் தான் வாழும் சகாப்தத்தில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button