அரசியல்செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி.

இரண்டு நாட்கள் அரச விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

இந்த விஜயத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய தேசிய பாதிகாப்பு ஆலோசகர், வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download