செய்திகள்

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவருடன், அவரின் மனைவி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அவருடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 11ம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, திடீரென அமெரிக்கா நோக்கி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button