அரசியல்
நாடே எதிர்ப்பார்த்திருந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது.
இந்த நிலையில், நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
அத்துடன், அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.