செய்திகள்

நாட்டின் அமைதியை பேண முப்படையினர் -அதிவிசேட வர்த்தமானி வெளியானது ..

பொது மக்கள் மத்தியில் அமைதியைப் பேணும் பொருட்டு நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் கட்டளை சட்டத்திற்கமைய ஜனாதிபதியால் வெளியிடப்படுகின்றது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, நிர்வாக மாவட்டங்களான 25 மாவட்டங்கள் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரைப் பிரதேசங்களில் இந்த அமைதி நடவடிக்கை அமுலில் இருக்கும்.

Related Articles

Back to top button