மலையகம்

நாட்டின் அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தங்களின் நோக்கம் நிறைவேற மலையக இளைஞர் குழாமின் கொழும்பை நோக்கிய நடைபயணம்

இலங்கை அரிசியலில் சமீப காலமாக பல மாற்றங்கள் நிலவியுள்ளதுடன், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் இடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளதுடன், இலங்கை அரசியல் குறித்து பல்வேறு கருத்துவேறுபாடுகளும் வெளிவந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

அரசியல் மாற்றத்தினால் நாடு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன், பெருந்தோட்ட தொழிலாளர்களி வேதன உயர்வு குறித்தும் இதுவரையும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை .

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மலையகத்தில் இருந்து கொழும்பை நோக்கிய மலையக இளைஞர் குழாமின் நடைபயணம் தொடந்த வண்ணமே உள்ளது.

குறித்த நடைபயண பேரணி தற்பொழுது கடுவலையை கடந்து கொழும்பை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

இதன்போது அவர்கள் 17 அம்சங்களை கொண்ட கோரிக்கைகளோடு இந்த நடைபயணத்தை முன்னெடுத்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு ஆதரவு வழங்க மக்கள் உதவிகளை வேண்டியுள்ளதாக ஏற்பாட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button