கல்விசெய்திகள்

நாட்டின் அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் திருடிவிட்டன

களவாட முடிந்தால் நம் நாட்டின் இலவச கல்வியின் தந்தை´ என்ற வார்த்தையை கூட திருடி விடுவார்கள் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற செயற்றிட்டத்திற்கு அமைய காலி மஹிந்த கல்லூரியில் 310 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் திருடிவிட்டதாகவும் , திருட முடியாத ஒன்று கல்வியாக மாத்திரமேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்ணங்கர கொடையாக வழங்கிய இலவச கல்வி துறையை தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download