காலநிலை

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும்…

வளிமண்டலத்தில் காணப்படும் செயற்றிறன் மிக்க அலைவடிவிலான இடையூறின் காரணமாக நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பின் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் கிழக்கு மற்றும் கடற்பிராந்தியங்களில் நிலவும் இதனால் குறித்த பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button