செய்திகள்

நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,000ஐ கடந்தது.

நாட்டில் நேற்று மேலும் 161 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை இன்று 6,000ஐ கடந்துள்ளது.

அத்துடன் நாட்டில் இன்று மேலும் 859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று 2,576 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரை மொத்தமாக 3,435 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 354,968 ஆக அதிகாித்துள்ளது.
அவர்களில் தற்போது, 39, 301 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen