காலநிலைசெய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யலாம்.!

நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யலாம் என வளிமண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Rainy weather

Related Articles

Back to top button