சமூகம்

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

நுவர வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடு காரணமாக இன்று இரவு 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அனுராதபுரம் நகரம் , விஜயபுர , யாழ்ப்பாணம் சந்தி , குருந்தன்குளம் மற்றும் ரம்பேவ போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதேவேளை , வீதி அபிவிருத்தி பணிகள் காரணமாக நாளை நள்ளிரவு 12 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணி வரை 18 மணி நேரம் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்ய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தீர்மானித்துள்ளது.

மேலும், மொரகஸ்முல்ல , ராஜகிரிய , எதுல்கோட்டை , ஒபேசேகரபுர , பண்டாரநாயக்கபுர , நாவல , கொஸ்வத்த மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளிலும் நீர் விநியோகம தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

41 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button