செய்திகள்

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் முன்னாள் பிரதமர் கருத்து.

(ராகவ்)

மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிடாவிட்டால் , நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் தடுப்பூசிகள், ஒட்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் படுக்கை பற்றாக்குறை காணப்படுவதாகவும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் 100 க்கும் மேற்பட்ட நாளாந்த இறப்புக்கள் பதிவாகலாம் என்ற தரவுகளை சேகரிக்கும் நிறுவனத்தை மேற்கோள் காட்டி அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் அரசியலா மாறியுள்ளதாகவும் , அந்த அரசியல் அரசாங்கதை பாதுகாப்பதற்கான பிரதான உத்தியாகியுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
image download