செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது குறித்து வளிமண்டள திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
இதனுடன் நாளை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் அதிகளவு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.