செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் மழை
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என்பதுடன் வடமேல் மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.