செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில் மழை காரணமாக யான் ஓயா, மா ஓயா, அத்தனகலுஒயா மற்றும் நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாதுருஒயாவின் நீர் மட்டம் நேற்றிரவு வரை உயர்வடைந்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா, மாத்தளை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

17 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button