செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று கடும் மழை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.

கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

43 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button