நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு ஆற்றி வரும் மலையக மக்கள்

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு ஆற்றி வரும் மலையக மக்கள் அடிமைகள் அல்ல. இலங்கையின் ஆட்சியாளர்கள் மலையக மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தியூள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதேச சபைகள் திருத்த சட்டமூலம்இ பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூல விவாத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்துக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கம் நிதி ஒதுக்கிடும் பட்சத்திலேயே அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றார்.
இன்று உலக சந்தையில் இலங்கையின் தேயிலை உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியழைடந்துள்ளது. இன்று தேயிலை உற்பத்தியில் 102 சதவீதம் சீனா உற்பத்தி செய்கின்ற நிலையில்இ இலங்கை 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது எனவே இலங்கையின் தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க நீங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறு தேயிலை உற்பத்தியில் சீனாஇ இந்தியாஇ கென்யா ஆகிய நாடுகள் முறையே 1,2,3ஆம் இடங்களில் இருக்கின்ற போது இலங்கை நான்காவது இடத்திலேயே உள்ளது என்றார்.
அதனையடுத்து உரையாற்றிய லக்ஸ்மன் யாப்பா ஆம் முதலாவது இடத்திலிருந்த இலங்கை 5 அல்லது 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதென்றால். இலங்கைத் தேயிலையில் சீனி உள்ளிட்ட பொருட்கள் கலப்பதால் இலங்கை தேயிலைக்கான தரம் சர்வதேசத்தில் குறைந்துள்ளது.
எனவே தேயிலையில் சீனி கலக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துஇ இலங்கையின் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கூறினார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க
தற்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி 307 சதவீதமாக காணப்படுவதாகவும், இந்த வருடம் 330 வீதமாக அதிகரிப்பதே எமது நோக்கம் என்று தெரிவித்ததுடன்இசில தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமைக்கான காரணம், முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடே எனத் தெரிவித்தார். அத்துடன் ஈரான்- துருக்கிகிடையிலான பிரச்சினை, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி என்பனவும் இலங்கையின் தேயிலை வீழ்ச்சிக்கான காரணம் எனத் தெரிவித்தார்.