செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்…!

நாட்டில் மேலும் 2, 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இவர்களில் 1,696 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is covid-srilanka.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com